Read all my poems
www.thottarayaswamy.net

6.அரைமுளம் பூ

உனை காண
காத்துக்கொண்டிருந்தபோது..

அரை முளம் பூவை
வாங்கி வைத்தேன்
சாலையோர கிழவியிடம்

உன்னிடம் தந்து
காதல் சொல்லிவிடவேண்டும்
என்றல்ல

வெய்யிலில்
அரைமுளப்பூவை
மூன்று மணிநேரம்
வைத்து காத்திருந்ததால்..

பூ உன்னிடம்
சேராதென்றாலும்

மதிய உணவை பசியில்
சுவைத்துக்கொண்டிருந்த
கிழவியின் பொக்கவாயில்

என் நிம்மதி
சுவைக்கப்படுவதை
கண்டேன் !

நீ
எனைகடந்து
போனதையும் மறந்து..
அரைமுளம் பூ

No comments: