Read all my poems
www.thottarayaswamy.net

26.மையிட்டு

நேசமானவளே!

வாக்களிக்கச்
சென்றுவிடாதே

உன்
நகங்களின் இடுக்கில்
மலர்ந்துகிடக்கும்
மனசை மையிட்டு
மறைத்துவிடுவார்கள்

ஜனநாயக
கடமையாளர்கள்.

No comments: