கல்லரை முன்
கண்ணீர் சிந்தி
கண்துடைக்க
என்னை எழுப்பிவிடாதே
உன்
கருவறையில்
ஜனனிக்க வேண்டும்
நான்!
100. நூறாவது கவிதை
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, April 03, 2007 1 comments
Labels: கவிதை
99.உள்ளங்கை
உன்
உள்ளங்கையில்
குடியேற ஆசைப்பட்டு
முற்றத்தில் சொட்டியது
அந்திமழை
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, April 03, 2007 1 comments
Labels: கவிதை
98.வலி
உதிர்ந்தது பூ
வலியில் துடித்தாய்
நீ!
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, April 03, 2007 1 comments
Labels: கவிதை
97பனிச்சிலை
சொட்டுச்சொட்டாக
உள் இறங்கி
உரைந்துப் பனிச்சிலையானது!
மனசெல்லாம்
நீ!
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, April 03, 2007 0 comments
Labels: கவிதை
96.கருவறை
என்
உயிர் நெய்த
கருவறையில்
உனைக்கிடத்தி
காதல் வலியெடுக்க
காத்திருந்தேன்
உன்னை பிரசுவிக்க!
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, April 03, 2007 0 comments
Labels: கவிதை
95.தீக்குள் விரலை வைத்தால்
தீக்குள் விரலை வைத்தால்
உன்னை தீண்டும் இன்பம்
தோன்றுதடி
நான்
பூக்களை பரித்துவிட்டால்
உன் பாதி உயிர்
கரையுதடி
நீ
என்ன முரண்களின்
மகளா!
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, April 03, 2007 0 comments
Labels: கவிதை
94.தோசம்!
என் உதடு யாத்திரீகன்கள்
உன் செவ்விதழை சுவைத்தபோதே
பிடித்துவிட்டது எனக்கு
செவ்வாய் தோசம்!
Posted by THOTTARAYASWAMY.A at Tuesday, April 03, 2007 0 comments
Labels: கவிதை
93.போட்டி
காட்சிப்பிழைகளில் கூட
உந்தன் இன்னொரு
பிம்பத்தை ஏற்க மறுக்கின்றது
என் கண்கள்.
உனக்குப் போட்டியாக
இன்னொருத்தி இருப்பதாக
நினைத்து.
Posted by THOTTARAYASWAMY.A at Monday, April 02, 2007 0 comments
Labels: கவிதை
92. தேள்
சினேகிதா!
தேளை தொட்டுப்பர்த்ததற்கா
இப்படி கூச்சலிடுகிறாயே
உன்னிடமுள்ள என்னுயிரை
அவ்வளவு எளிதாக தேளிடம்
தந்துவிடுவாயா என்ன.
Posted by THOTTARAYASWAMY.A at Sunday, April 01, 2007 0 comments
Labels: கவிதை
91.வெண்நிலா விற்பனைக்கு
வெண்நிலாக்கள் என்று
விற்பனை செய்துகொண்டிறுகிறேன்
நீ
ஒட்டி எரிந்த
ஸ்டிக்கர் பொட்டுக்களை.
Posted by THOTTARAYASWAMY.A at Sunday, April 01, 2007 1 comments
Labels: கவிதை
60(1) கனாக்கால கவிதைகள்
அனைத்துக் கனாக்கால கவிதைகளையும் படிக்கவழிவகை செய்த பதிவு . முதல் 60 கவிதைகள் மட்டும்.
தட்டுங்கள்
Posted by THOTTARAYASWAMY.A at Sunday, April 01, 2007 0 comments